Monday, 28 July 2014
Vijay Awards - Favourite Hero
Posted on 06:43 by harmision
Saturday, 5 July 2014
#VijayAwards @ARMurugadoss announces the FAVORITE HERO AWARD. The Winner is #VIJAY
Posted on 13:00 by harmision
Hero Vijay & Murugadoss Visits Ameer-Peer Darga In Kadapa
Posted on 05:04 by harmision
Thursday, 26 June 2014
Kaththi - Movie Stills
Posted on 02:07 by harmision
#Kaththi #AnandaVikatan article
Posted on 02:03 by harmision
Sunday, 22 June 2014
விஜய் - 40/40 - பிறந்த நாள் ஸ்பெஷல்!!
Posted on 08:52 by harmision
இளைய தளபதி விஜய்க்கு இன்று (ஜூன்
22) 40வது பிறந்த நாள். விஜய் ரசிகர்கள்
நாடு முழுவதும் தங்கள் இளைய
தளபதியின் பிறந்த நாளை அவரவர்
சக்திக்கு ஏற்ற வகையில் கொண்டாடிக்
கொண்டிருக்கிறார்கள். விஜய் பற்றிய 40
சுவையான தகவல்கள் இதோ...
1.
பெருசா ஜிம்முக்கு போயி அலக்கிட்டிக்றதே இல்லை.
அப்படி இருந்தும் அவரது இளமையின்
ரகசியம் அன்பு. "மற்றவர்கள்
மீது அன்பு செலுத்தினாலே உடம்புல
இளமை தங்கிடும்" என்பார் விஜய்.
2. எந்த மாஸ்டர்கிட்டேயும் டான்ஸ்
கத்துக்கிட்டதில்லை. அப்புறம்
எப்படி டான்சில் பொளந்து கட்டுகிறார்.
கவனிப்பு. டான்ஸ் மாஸ்டர்
ஒரு முறை ஆடிக்காட்டினால்
எது எத்தனை கடினமான ஸ்டெப்பாக
இருந்தாலும் ஆடிவிடுவார்.
3. யாருடன் போட்டோ எடுத்தாலும்
தோளோடு இருக அணைத்துக்
கொண்டுதான் போட்டோ எடுத்துக்
கொள்வார்.
4. படப்பிடிப்பில் யாருடனும் அதிகம்
பேசமாட்டார் நடிக்கிற கேரக்டர்
பற்றித்தான் சிந்தித்துக்
கொண்டிருப்பார். மற்ற நேரங்களில்
பாட்டு கேட்பார். புத்தகம் படிப்பார்.
5. விஜய்யுடன் அதிக படங்களில்
காமெடியனாக நடித்தவர் சார்லி
6. வெற்றி, குடும்பம், நான்
சிகப்பு மனிதன், வசந்த ராகம், சட்டம்
ஒரு விளையாட்டு, இது எங்க
பூமி படங்களில் குழந்தை நட்சதிரமாக
நடித்துள்ளார்.
7. ஹீரோவாக நடித்த முதல் படம்
நாளைய தீர்ப்பு. முதல் ஹீரோயின்
கீர்த்தனா.
8. விஜய்யின் ஆரம்ப கால படங்களின்
ஹீரோயின் சங்கவி. இருவரும்
இணைந்து நடித்த ரசிகன் படம் 175 நாட்கள்
ஓடியது. விஜய்யின் முதல்
வெள்ளிவிழா படம் அது.
9. குழந்தை நட்சத்திரமாக
இருந்தவரை ஹீரோவாக்கியது நாளைய
தீர்ப்பு. பிளேபாய் ஹீரோவாக
நடித்தவரை செண்டிமென்ட்
ஹீரோவாக்கியது காதலுக்கு மரியாதை.
ஆக்ஷன் ஹீரோவாக்கியது பகவதி.
10. நடித்த மொத்த படங்கள் 56. அதிக நாள்
ஓடிய படம் கில்லி. அதிக வசூலைக்
கொடுத்த படம் துப்பாக்கி.
11. காதலுக்கு மரியாதை படத்தில்
நடிததற்காக தமிழக அரசின் சிறந்த நடிகர்
விருதை பெற்றார்.
அதோடு எம்.ஜி.ஆர்.விருதும்,
திருப்பாச்சி படத்துக்கு சிறப்பு விருதும்,
தமிழக அரசிடமிருந்து பெற்றார்.
12. ஹீரோவாக
நடிப்பதற்கு முன்பு சண்டையோ,
நடனமோ கற்றுக் கொண்டதில்லை.
லயோலா கல்லூரியில் விஷ்காம்
படித்து முடித்தார்.
13. ரசிகன் படத்தில்
"பாம்பே சிட்டி சுக்கா ரொட்டி..."
பாடலை முதன் முதலாக பாடினார்.
இசை தேவா. கடைசியாக ஜில்லாவில்
"கண்டாங்கி கண்டாங்கி..." பாடினார்
இசை டி.இமான். பாடிய மொத்த
பாடல்கள் 23. அத்தனையும் ஹிட்.
14. இன்றைக்கு இந்தியில் டாப்பில்
இருக்கும் பிரியங்கா சோப்ராவின்
முதல் ஹீரோ விஜய். நடித்த படம் தமிழன்.
இவர்கள் தவிர பிபாசபாசு (சச்சின்),
ஹாசல் கரொவ்னி (ஜில்லா),
அமீஷா படேல் (புதிய கீதை),
இலியானா (நண்பன்) ஆகிய பாலிவுட்
நடிகைளும் ஜோடியாக நடித்துள்ளனர்.
15. விஜய் குழந்தை நட்சத்திரமா நடித்த
முதல் படம் வெற்றி. அதற்காக வாங்கின
சம்பளம் 500 ரூபாய்.
தற்போது நடித்து வரும்
கத்தி படத்திற்கு வாங்கியிருப்பதாக
சொல்லப்படும் சம்பளம் 15 கோடி.
16. சினிமாவில் நடிக்க வீட்டில்
எதிர்ப்பு கிளம்பியதால்
ஒரு முறை லட்டர்
எழுதிவைத்து விட்டு சென்று விட்டார்.
பின்னர் தேடிக்
கண்டுபிடித்து வீட்டுக்கு அழைத்து வந்தனர்.
17.
விஜய்க்கு பிடித்தது கவுண்டமணி காமெடியும்,
இளையராஜா பாடல்களும். காரில் இந்த
இரண்டும் கட்டாயம் இருக்கும்.
18. நீண்ட தூரம் காரில் பயணம்
செல்வது ரொம்ப பிடிக்கும்.
மனசு லேசாக வேண்டுமானால்
காரை எடுத்துக்
கொண்டு கிளம்பி விடுவார்.
19. அவருக்கு பிடிச்சது கருப்பு கலர்
கார். கார்கள், கம்பெனிகள் நம்பர்கள்
மாறினாலும் கருப்பு நிறம் மட்டும்
மாறாது.
20. பொதுவாக எல்லோரையும்
"வாங்கண்ணா" என்று அழைப்பார் ரொம்ப
நெருக்கமானவர்களில்
இளையவர்களை "வாடா ராஜா" என்றும்
மூத்தவர்களை "வாங்க ராஜா" என்பார்.
கல்லூரி நண்பர்களை "மச்சி"
என்று அழைப்பார்.
21. குழந்தை நட்சத்திரமாக விஜய் நடித்த
அனைத்துமே சின்ன வயது விஜயகாந்த்
கேரக்டர்கள்தான்.
22. எளிய உடைகளே விஜய்யின்
பேவரிட். குறிப்பாக
வெள்ளை சட்டையை விரும்பி அணிவார்.
23. தன்னை வைத்து படம்
இயக்கி கஷ்டத்தில் இருக்கும்
இயக்குனர்களுக்கு தலா 5 லட்சம்
கொடுத்து உதவிய ஒரே நடிகர் விஜய்.
24. ஒவ்வொரு பிறந்த நாளின் போதும்
அம்மா அப்பாவை நேரில்
சந்தித்து காலில் விழுந்து ஆசீர்வாதம்
வாங்குவார்.
25. ஒவ்வொரு படம் முடிந்த பிறகும்
படம் வெற்றி பெற வேண்டும்
என்பதற்காக
வேளாங்கன்னி சென்று பிரார்த்தனை செய்து விட்டு வருவார்.
26. தங்கத்தில் நகைகள் அணியும் வழக்கம்
இல்லை.
27. தனக்காக மட்டும் இல்லாமல் பிற
நடிகர்களுக்காகவும்
பின்னணி பாடியிருக்கிறார்
பெரியண்ணா படத்தில்
சூர்யாவுக்காகவும், வேலை படத்தில்
விக்னேசுக்காவும்
பாடியிருக்கிறார்.
28. அப்பா எஸ்.ஏ.சந்திரசேகரின் படங்களில்
ஹீரோவின் பெயர் விஜய்
என்றே இருக்கும். அவரது இயக்கத்தில்
அதிக படங்களில் நடித்தவர் விஜயகாந்த்,
அவர் அறிமுகப்படுத்திய
இசையமைப்பாளருக்கும் விஜய்
ஆண்டனி என்றே பெயர் வைத்தார். அந்த
அளவிற்கு மகன்
மீது அப்பாவுக்கு பாசம்.
29. விஜய் படங்களுக்கு சம்பளம்
வாங்காமல் காஸ்ட்டியூம் டிசைனராக
வேலை பார்ப்பவர் மனைவி சங்கீதா
30. விஜய்க்கு இப்போது வீடியோ கேம்
என்றால் உயிர்.
அவருக்கு வீடியோ கேம்களை கற்றுக்
கொடுத்தது மகன் சஞ்சய்.
31. உலகம் முழுவதும் சுற்றினாலும்
சென்னைக்கு அடுத்து விஜய்க்கு பிடித்த
ஊர் லண்டன். காதல் மனைவி கிடைத்த ஊர்
என்பதால் மட்டுமல்ல, லண்டனின்
தூய்மைக்கு அவர் அடிமை.
32. குழந்தைகள் சஞ்சய், சாஷா என்றால்
விஜய்க்கு உயிர். அவர்களின் மழலை கால
பேச்சுக்களை ஆடியோவில்
பதிவு செய்து வைத்திருக்கிறார்.
குழந்தைகளின் ஒவ்வொரு பிறந்த
நாளையும் வீடியோவாக
எடுத்து அதன்
கலெக்ஷன்களை சேர்த்து வருகிறார்.
33. எளிதில் உணர்ச்சி வசப்படாத விஜய்
அம்மாவுடன் ஒரு விளம்பரபடத்தில்
நடித்தபோது ரொம்பவே உணர்ச்சி வசப்பட்டார்.
34. தமிழ் நாட்டில் ரசிகர்
மன்றங்களை அமைப்பு ரீதியாக பலமாக
வைத்திருப்பது விஜய்தான்.
சென்னையில் இருந்தால் மாதத்தில்
இரண்டாவது மற்றும்
நான்காவது ஞாயிற்றுக்கிழமைய
ரசிகர்களை சந்திக்க ஒதுக்குகிறார்.
35. அழகிய தமிழ் மகன்
படத்துக்கு பிறகு கத்தி படத்தில்
இரட்டை வேடத்தில் நடித்து வருகிறார்.
36. நேருக்கு நேர், பிரண்ட்ஸ் படங்களில்
சூர்யாவுடன் நடித்தார். அதன்
பிறகு நண்பன் படத்தில் ஜீவா,
ஸ்ரீகாந்தோடு நடித்தார்.
37. தெலுங்கு, இந்திப் படங்களில் நடிக்க
வந்த வாய்ப்புகளை தவிர்த்துவிட்டார்.
தமிழ் படங்களே போதும்
என்பது அவரது கருத்து. ரவுடி ரத்தோர்
படத்தில் பிரபு தேவா கேட்டுக்
கொண்டதற்காக அக்ஷய் குமாருடன்
ஒரு பாட்டுக்கு ஆடினார்
38. சூப்பர் ஸ்டார் ரஜினி வழியில்
தனது உதவியாளர்
பி.டி.செல்வகுமாரை தனது அடுத்த
படத்தின் தயாரிப்பாளராக்கிவிட்டார்.
39. அதிகமான
இயக்குனர்களை அறிமுகப்படுத்தியது விஜய்தான்.
பேரரசு, ஜெகன், எழில், செல்வா, பரதன்,
ரமணா, ஜான் மகேந்திரா, மாதேஷ்,
எஸ்.பி.ராஜ்குமார் உள்பட 22 பேர்.
40. விஜய் தன் பிறந்த நாளை எப்போதும்
ஆடம்பரமாக
கொண்டாடுவதில்லை தனது பிறந்த
நாளை உதவும் நாளாக
கொண்டாடுங்கள்
என்று அறிவுறுத்துவார்.
இந்தாண்டு அவருக்கு 40வது பிறந்தநாள்
ஒரு முன்னணி தமிழ் வார இதழ் நடத்திய
கருத்து கணிப்பில் இளைய
தளபதி விஜய் அடுத்த சூப்பர் ஸ்டாராக
வெற்றி பெற்றிருக்கிறார். இதுதான்
அவருக்கு கிடைத்த முதல் பிறந்த நாள்
பரிசு.
நமது பரிசையும்
அவருக்கு கொடுப்போம். அன்பான
வாழ்த்துக்களாக...
22) 40வது பிறந்த நாள். விஜய் ரசிகர்கள்
நாடு முழுவதும் தங்கள் இளைய
தளபதியின் பிறந்த நாளை அவரவர்
சக்திக்கு ஏற்ற வகையில் கொண்டாடிக்
கொண்டிருக்கிறார்கள். விஜய் பற்றிய 40
சுவையான தகவல்கள் இதோ...
1.
பெருசா ஜிம்முக்கு போயி அலக்கிட்டிக்றதே இல்லை.
அப்படி இருந்தும் அவரது இளமையின்
ரகசியம் அன்பு. "மற்றவர்கள்
மீது அன்பு செலுத்தினாலே உடம்புல
இளமை தங்கிடும்" என்பார் விஜய்.
2. எந்த மாஸ்டர்கிட்டேயும் டான்ஸ்
கத்துக்கிட்டதில்லை. அப்புறம்
எப்படி டான்சில் பொளந்து கட்டுகிறார்.
கவனிப்பு. டான்ஸ் மாஸ்டர்
ஒரு முறை ஆடிக்காட்டினால்
எது எத்தனை கடினமான ஸ்டெப்பாக
இருந்தாலும் ஆடிவிடுவார்.
3. யாருடன் போட்டோ எடுத்தாலும்
தோளோடு இருக அணைத்துக்
கொண்டுதான் போட்டோ எடுத்துக்
கொள்வார்.
4. படப்பிடிப்பில் யாருடனும் அதிகம்
பேசமாட்டார் நடிக்கிற கேரக்டர்
பற்றித்தான் சிந்தித்துக்
கொண்டிருப்பார். மற்ற நேரங்களில்
பாட்டு கேட்பார். புத்தகம் படிப்பார்.
5. விஜய்யுடன் அதிக படங்களில்
காமெடியனாக நடித்தவர் சார்லி
6. வெற்றி, குடும்பம், நான்
சிகப்பு மனிதன், வசந்த ராகம், சட்டம்
ஒரு விளையாட்டு, இது எங்க
பூமி படங்களில் குழந்தை நட்சதிரமாக
நடித்துள்ளார்.
7. ஹீரோவாக நடித்த முதல் படம்
நாளைய தீர்ப்பு. முதல் ஹீரோயின்
கீர்த்தனா.
8. விஜய்யின் ஆரம்ப கால படங்களின்
ஹீரோயின் சங்கவி. இருவரும்
இணைந்து நடித்த ரசிகன் படம் 175 நாட்கள்
ஓடியது. விஜய்யின் முதல்
வெள்ளிவிழா படம் அது.
9. குழந்தை நட்சத்திரமாக
இருந்தவரை ஹீரோவாக்கியது நாளைய
தீர்ப்பு. பிளேபாய் ஹீரோவாக
நடித்தவரை செண்டிமென்ட்
ஹீரோவாக்கியது காதலுக்கு மரியாதை.
ஆக்ஷன் ஹீரோவாக்கியது பகவதி.
10. நடித்த மொத்த படங்கள் 56. அதிக நாள்
ஓடிய படம் கில்லி. அதிக வசூலைக்
கொடுத்த படம் துப்பாக்கி.
11. காதலுக்கு மரியாதை படத்தில்
நடிததற்காக தமிழக அரசின் சிறந்த நடிகர்
விருதை பெற்றார்.
அதோடு எம்.ஜி.ஆர்.விருதும்,
திருப்பாச்சி படத்துக்கு சிறப்பு விருதும்,
தமிழக அரசிடமிருந்து பெற்றார்.
12. ஹீரோவாக
நடிப்பதற்கு முன்பு சண்டையோ,
நடனமோ கற்றுக் கொண்டதில்லை.
லயோலா கல்லூரியில் விஷ்காம்
படித்து முடித்தார்.
13. ரசிகன் படத்தில்
"பாம்பே சிட்டி சுக்கா ரொட்டி..."
பாடலை முதன் முதலாக பாடினார்.
இசை தேவா. கடைசியாக ஜில்லாவில்
"கண்டாங்கி கண்டாங்கி..." பாடினார்
இசை டி.இமான். பாடிய மொத்த
பாடல்கள் 23. அத்தனையும் ஹிட்.
14. இன்றைக்கு இந்தியில் டாப்பில்
இருக்கும் பிரியங்கா சோப்ராவின்
முதல் ஹீரோ விஜய். நடித்த படம் தமிழன்.
இவர்கள் தவிர பிபாசபாசு (சச்சின்),
ஹாசல் கரொவ்னி (ஜில்லா),
அமீஷா படேல் (புதிய கீதை),
இலியானா (நண்பன்) ஆகிய பாலிவுட்
நடிகைளும் ஜோடியாக நடித்துள்ளனர்.
15. விஜய் குழந்தை நட்சத்திரமா நடித்த
முதல் படம் வெற்றி. அதற்காக வாங்கின
சம்பளம் 500 ரூபாய்.
தற்போது நடித்து வரும்
கத்தி படத்திற்கு வாங்கியிருப்பதாக
சொல்லப்படும் சம்பளம் 15 கோடி.
16. சினிமாவில் நடிக்க வீட்டில்
எதிர்ப்பு கிளம்பியதால்
ஒரு முறை லட்டர்
எழுதிவைத்து விட்டு சென்று விட்டார்.
பின்னர் தேடிக்
கண்டுபிடித்து வீட்டுக்கு அழைத்து வந்தனர்.
17.
விஜய்க்கு பிடித்தது கவுண்டமணி காமெடியும்,
இளையராஜா பாடல்களும். காரில் இந்த
இரண்டும் கட்டாயம் இருக்கும்.
18. நீண்ட தூரம் காரில் பயணம்
செல்வது ரொம்ப பிடிக்கும்.
மனசு லேசாக வேண்டுமானால்
காரை எடுத்துக்
கொண்டு கிளம்பி விடுவார்.
19. அவருக்கு பிடிச்சது கருப்பு கலர்
கார். கார்கள், கம்பெனிகள் நம்பர்கள்
மாறினாலும் கருப்பு நிறம் மட்டும்
மாறாது.
20. பொதுவாக எல்லோரையும்
"வாங்கண்ணா" என்று அழைப்பார் ரொம்ப
நெருக்கமானவர்களில்
இளையவர்களை "வாடா ராஜா" என்றும்
மூத்தவர்களை "வாங்க ராஜா" என்பார்.
கல்லூரி நண்பர்களை "மச்சி"
என்று அழைப்பார்.
21. குழந்தை நட்சத்திரமாக விஜய் நடித்த
அனைத்துமே சின்ன வயது விஜயகாந்த்
கேரக்டர்கள்தான்.
22. எளிய உடைகளே விஜய்யின்
பேவரிட். குறிப்பாக
வெள்ளை சட்டையை விரும்பி அணிவார்.
23. தன்னை வைத்து படம்
இயக்கி கஷ்டத்தில் இருக்கும்
இயக்குனர்களுக்கு தலா 5 லட்சம்
கொடுத்து உதவிய ஒரே நடிகர் விஜய்.
24. ஒவ்வொரு பிறந்த நாளின் போதும்
அம்மா அப்பாவை நேரில்
சந்தித்து காலில் விழுந்து ஆசீர்வாதம்
வாங்குவார்.
25. ஒவ்வொரு படம் முடிந்த பிறகும்
படம் வெற்றி பெற வேண்டும்
என்பதற்காக
வேளாங்கன்னி சென்று பிரார்த்தனை செய்து விட்டு வருவார்.
26. தங்கத்தில் நகைகள் அணியும் வழக்கம்
இல்லை.
27. தனக்காக மட்டும் இல்லாமல் பிற
நடிகர்களுக்காகவும்
பின்னணி பாடியிருக்கிறார்
பெரியண்ணா படத்தில்
சூர்யாவுக்காகவும், வேலை படத்தில்
விக்னேசுக்காவும்
பாடியிருக்கிறார்.
28. அப்பா எஸ்.ஏ.சந்திரசேகரின் படங்களில்
ஹீரோவின் பெயர் விஜய்
என்றே இருக்கும். அவரது இயக்கத்தில்
அதிக படங்களில் நடித்தவர் விஜயகாந்த்,
அவர் அறிமுகப்படுத்திய
இசையமைப்பாளருக்கும் விஜய்
ஆண்டனி என்றே பெயர் வைத்தார். அந்த
அளவிற்கு மகன்
மீது அப்பாவுக்கு பாசம்.
29. விஜய் படங்களுக்கு சம்பளம்
வாங்காமல் காஸ்ட்டியூம் டிசைனராக
வேலை பார்ப்பவர் மனைவி சங்கீதா
30. விஜய்க்கு இப்போது வீடியோ கேம்
என்றால் உயிர்.
அவருக்கு வீடியோ கேம்களை கற்றுக்
கொடுத்தது மகன் சஞ்சய்.
31. உலகம் முழுவதும் சுற்றினாலும்
சென்னைக்கு அடுத்து விஜய்க்கு பிடித்த
ஊர் லண்டன். காதல் மனைவி கிடைத்த ஊர்
என்பதால் மட்டுமல்ல, லண்டனின்
தூய்மைக்கு அவர் அடிமை.
32. குழந்தைகள் சஞ்சய், சாஷா என்றால்
விஜய்க்கு உயிர். அவர்களின் மழலை கால
பேச்சுக்களை ஆடியோவில்
பதிவு செய்து வைத்திருக்கிறார்.
குழந்தைகளின் ஒவ்வொரு பிறந்த
நாளையும் வீடியோவாக
எடுத்து அதன்
கலெக்ஷன்களை சேர்த்து வருகிறார்.
33. எளிதில் உணர்ச்சி வசப்படாத விஜய்
அம்மாவுடன் ஒரு விளம்பரபடத்தில்
நடித்தபோது ரொம்பவே உணர்ச்சி வசப்பட்டார்.
34. தமிழ் நாட்டில் ரசிகர்
மன்றங்களை அமைப்பு ரீதியாக பலமாக
வைத்திருப்பது விஜய்தான்.
சென்னையில் இருந்தால் மாதத்தில்
இரண்டாவது மற்றும்
நான்காவது ஞாயிற்றுக்கிழமைய
ரசிகர்களை சந்திக்க ஒதுக்குகிறார்.
35. அழகிய தமிழ் மகன்
படத்துக்கு பிறகு கத்தி படத்தில்
இரட்டை வேடத்தில் நடித்து வருகிறார்.
36. நேருக்கு நேர், பிரண்ட்ஸ் படங்களில்
சூர்யாவுடன் நடித்தார். அதன்
பிறகு நண்பன் படத்தில் ஜீவா,
ஸ்ரீகாந்தோடு நடித்தார்.
37. தெலுங்கு, இந்திப் படங்களில் நடிக்க
வந்த வாய்ப்புகளை தவிர்த்துவிட்டார்.
தமிழ் படங்களே போதும்
என்பது அவரது கருத்து. ரவுடி ரத்தோர்
படத்தில் பிரபு தேவா கேட்டுக்
கொண்டதற்காக அக்ஷய் குமாருடன்
ஒரு பாட்டுக்கு ஆடினார்
38. சூப்பர் ஸ்டார் ரஜினி வழியில்
தனது உதவியாளர்
பி.டி.செல்வகுமாரை தனது அடுத்த
படத்தின் தயாரிப்பாளராக்கிவிட்டார்.
39. அதிகமான
இயக்குனர்களை அறிமுகப்படுத்தியது விஜய்தான்.
பேரரசு, ஜெகன், எழில், செல்வா, பரதன்,
ரமணா, ஜான் மகேந்திரா, மாதேஷ்,
எஸ்.பி.ராஜ்குமார் உள்பட 22 பேர்.
40. விஜய் தன் பிறந்த நாளை எப்போதும்
ஆடம்பரமாக
கொண்டாடுவதில்லை தனது பிறந்த
நாளை உதவும் நாளாக
கொண்டாடுங்கள்
என்று அறிவுறுத்துவார்.
இந்தாண்டு அவருக்கு 40வது பிறந்தநாள்
ஒரு முன்னணி தமிழ் வார இதழ் நடத்திய
கருத்து கணிப்பில் இளைய
தளபதி விஜய் அடுத்த சூப்பர் ஸ்டாராக
வெற்றி பெற்றிருக்கிறார். இதுதான்
அவருக்கு கிடைத்த முதல் பிறந்த நாள்
பரிசு.
நமது பரிசையும்
அவருக்கு கொடுப்போம். அன்பான
வாழ்த்துக்களாக...
Subscribe to:
Posts (Atom)